திருவலஞ்சுழி கணபதி
பல்லவி
வலஞ்சுழி கணபதியே பதமலர் பணிந்து
வலம் வந்து உனையே தினம் துதித்தேன் - திரு
அனுபல்லவி
நலமுடன் கல்வியும் செல்வமும் நல்வாழ்வும்
குலமும் ஞானமும் நீயெனக்கருள்வாய்
சரணம்
ஜனனமரணமென்னும் பவச்சுழல் களைந்து
வினைதீர்ப்பவனே கேசவன் மருகனே
தனக்குவமையில்லாத தனிப்பெருந்தெய்வமே
உனதருள் இல்லையேல் உலகுயிர் நிலைக்குமோ
No comments:
Post a Comment