ஶ்ரீ வரலக்ஷ்மி
பல்லவி
ஶ்ரீ வரலக்ஷ்மி நீ வரவேண்டும்
தேவர்கள் பணிந்திடும் திருமகளே அலைமகளே
அனுபல்லவி
பாவையர் நோன்பிருந்து ஆவணி நந்நாளில்
தேவி உனதருளை வேண்டித்துதித்திட
சரணம்
மாவிலைத்தோரணம் அழகுடன் தொங்க
பூவிலும் பொன்னிலும் மாலைகள் சூடி
மெட்டியும் கொலுசும் ஒட்டியாணமும்
பட்டுடையும் தரித்து மூக்குத்தி அணிந்து
அட்டிகை கைவளை வங்கியும் பூட்டி
நெத்தியில் சுட்டியும் பொட்டும் வைத்து
மஞ்சள் குங்குமம் மருதாணி பூசி
மங்கள வதனமும் எழிலுடன் திகழ
No comments:
Post a Comment