திருமீயச்சூர் லலிதாம்பிகை
பல்லவி
மீயச்சூர் திருத்தலத்தில் கோயில் கொண்டிருப்பவளே
மாயே ஶ்ரீ லலிதாம்பிகையே - திரு
அனுபல்லவி
தாயுனையே தஞ்சமடைந்தேன்
நீயே கைவிட்டால் வேறெங்கு செல்வேன்
சரணம்
தாயேயுன் கடைக்கண்ணருளிருந்தால் போதும்
தீயினில் தூசாகும் பவவினைப் பயனனைத்தும்
சேயெனைக்காப்பது உனக்கொரு பாரமா
ஆயிரம் பெயருடைய கேசவன் சோதரி
No comments:
Post a Comment