வேதவல்லி நாதன்
பல்லவி
நீலவண்ணன் நீயே எனை சோதித்தால்
ஞாலம்தனில் எனக்கு வேறு புகலேது
அனுபல்லவி
காலடி நிழலே சதமெனத் துதித்தேன்
மாலனே கேசவா மனமிரங்கி எனக்கருள்வாய்
சரணம்
பாலகிருஷ்ணனாய்க் காளிங்கன் தலைமீது
கோலமுடன் களிநடம் புரிந்த கோபாலனே
சாலச்சிறந்த நன்மங்கலம் தலத்தில்
வேதவல்லியுடனமர்ந்து காட்சியளித்திடும்
No comments:
Post a Comment