கண்ணெதிரில் கேசவன்
பல்லவி
கண்ணெதிரில் கண்டாலும் உன்னை அறியாத
மூடரை நான் என்னென்று சொல்வேன் கேசவா
அனுபல்லவி
தொண்டு செய்பவராய் நேசமுள்ள நண்பராய்
திண்ணையிலுறங்கும் மௌனியாய் குருவாய்
சரணம்
வண்ணமயில் தோகையில் மின்னும் பேரழகாய்
தண்மதியாய் தாரகையாய் வானவெளியில் கதிரவனாய்
வண்ணமுள்ள பூக்களாய் அதில் தோன்றும் வாசமாய்
பண்ணிசையில் ஓசையாய் பாட்டின் பொருளாய்
No comments:
Post a Comment