பத்மாசினி ( திருப்புல்லாணி )
பல்லவி
அன்னை பத்மாசினியின் மலர்த்தாள் பணிந்தேன்
பன்னகசயனன் கேசவன் நாயகி
அனுபல்லவி
மன்னுபுகழ் புல்லாணித் திருத்தலத்திலெழுந்தருளி
ஆதிஜகந்நாதன் மனம் மகிழ உடனிருக்கும்
சரணம்
என் வாக்கில் உந்தன் செல்வாக்கை ஓதிட
உன்னருள் வேண்டினேன் ஶ்ரீமகாலஷ்மி
சின்னஞ்சிறியேன் உபசாரமேற்று
இன்னருள் தந்தெனை காத்தருள வேண்டுமென
No comments:
Post a Comment