Monday, 21 March 2016

ஆதி கேசவா



              ஆதி கேசவா

                   பல்லவி

        உனையன்றி உலகில் வேறொரு தெய்வம்
        வேண்டிலேன் என்றும் ஆதி கேசவா

                  அனுபல்லவி

         நினைந்துருகி மனமார அனுதினம் துதித்திடும்
         எனையாட்கொள்ள முக்தியளித்திட

                      சரணம்

          தினையளவு துதித்தாலும் பனையளவு பலன் தரும்
          வினைதீர்த்தருளும் வேங்கடமுடையானே
          நினைப்பவர் மனங்களைக் களிப்புறச் செய்திடும்
          அனைவருக்கும் அருளளிக்கும் ஆராவமுதே 

No comments:

Post a Comment