எந்த நேரமும்
பல்லவி
எந்த நேரமும் கேசவன் திருநாமம்
துதித்துக்கொண்டே இருக்க வேண்டும் நான்
அனுபல்லவி
உந்திகமல பெருமான் அவனை
சிந்தையில் வைத்து சீரடி போற்றி
சரணம்
சந்ததம் அவன் நாம சங்கீர்த்தனம் செய்து
வந்தனை புரிந்திடும் அருளொன்றே வேண்டினேன்
முந்தைய பழவினைப் பயன்கள் தொலைந்திட
பந்த பாசத்தளைகளை களைந்திட
No comments:
Post a Comment