சென்ன கேசவன்
பல்லவி
அருகிலிருந்தும் அறியாமலிருந்தேன்
திருமாலே உனையே தேடித்திரிந்தேன்
அனுபல்லவி
குருவாய்த்தந்தையாய்த் தாயாய்த்தோழனாய்
அருந்தவ முனிவர்க்கு அடியார்க்குத் தொண்டனாய்
சரணம்
பெருமை வீண் புகழ் பேசித்திரிந்தேன்
கருமவினைப் பயனால் கட்டுண்டு தவித்தேன்
திருந்தி மனம் வருந்தி உனையே துதித்தேன்
கருணையுடன் எனைக் காத்தருள் கேசவா
No comments:
Post a Comment