கமாக்ஷி
பல்லவி
புரியாத புதிரும் நீயோ கமாக்ஷி
அரியயனரனும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
விரிகமல மலரும் பாசாங்குசமும்
கரமலரிலேந்தும் கருணைத்தெய்வமே
சரணம்
சரியும் தவறும் அறியாத பருவத்தில்
தெரியாமல் நான் செய்த பிழையெல்லாம் பொறுத்து
பரிந்தருள்புரிந்திட வேண்டியுனைத் துதித்தேன்
கரியவன் கேசவன் அன்பு சோதரி
No comments:
Post a Comment