மும்முக கணபதி
பல்லவி
மும்முகம் காட்டும் தும்பிக்கையானை
நம்பித்துதித்தேன் நலம் தருவாயென
அனுபல்லவி
அம்புயநாபன் கேசவன் மருகனை
சம்பு கபாலி உமையாள் மைந்தனை
சரணம்
தம்பி மருகன் வள்ளியை மணந்திட
அன்புடன் உதவிய ஆனைமுகத்தோனை
உம்பரும் முனிவரும் நந்தியும் கணங்களும்
அம்புயமலரமர் பிரமனும் வணங்கிடும்
No comments:
Post a Comment