காளிங்க நடனம்
பல்லவி
ஆடும் அழகைக்காண கோடிக்கண் வேண்டும்
காளிங்கன் தலைமீது கால் வைத்துக் கேசவன்
அனுபல்லவி
வேடிக்கையாக ஒரு கையில் வால்பிடித்து
மறுகையில் பலவித அபிநயங்கள் காண்பித்து
சரணம்
தண்டைகள் குலுங்கிட கொண்டையசைந்தாட
குண்டலங்களிரண்டும் காதில் தானாட
வண்டினிசைக்கேற்ப மயில்பீலியாட
அண்டசராசரங்களனைத்துமுடனாட
வண்ணமுத்துமாலைகளும் அணிமணிகளுமாட
கண்டோரும் மெய்மறந்து வியந்தவனைக் கொண்டாட
விண்ணோரும் வான்வெளியில் மலர்தூவி நின்றாட
பண்ணிசைக்கும் குழலாட கைவளைகள் சேர்ந்தாட
No comments:
Post a Comment