வல்வில் ராமன்
பல்லவி
உள்ளத்தில் பள்ளி கொள்ள வேண்டுமென விரும்பி
திருமாலே மணிவண்ணா திருவடி தொழுதேன்
அனுபல்லவி
புள்ளம் பூதங்குடி வல்வில் ராமனே
தெள்ளியனே உனதருளை அள்ளி அளித்தென்
சரணம்
அள்ளக் குறையாத மாபெரும் சமுத்திர
வெள்ளத்தின் நடுவே பாம்பணையில் கிடக்கும்
கள்ளழகன் கேசவனே எளியோர்க்கருள்பவனே
எள்ளத்தனையேனும் என்னிடத்தில் கருணைவைத்தென்
No comments:
Post a Comment