அக்காரக்கனி
பல்லவி
சக்கரக்கையனை ஆதிகேசவனை
பக்தியுடன் போற்றி மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
அக்காரக்கனியாய் யோகநரசிம்மனாய்
திருக்கடிகை திருத்தலத்தில் அடியார்க்கு காட்சிதரும்
சரணம்
தன்னலமில்லாத தூயமனமும்
இன்னிசையறிவும் கல்வியும் ஞானமும்
கன்மவினை தொடராத நல்வாழ்வும் செல்வமும்
என்றும் எனக்கருள வேண்டுமெனத் துதித்து
No comments:
Post a Comment