ஓங்கார கணபதி
பல்லவி
உனதருள் வேண்டினேன் கணபதியே
எனது மனக்கவலை அனைத்தும் நீங்கிட
அனுபல்லவி
கனவிலும் நினைவிலும் உனையே துதித்து
தினமுன் திருவடியை மறவாமல் பணிந்தேன்
சரணம்
தேங்காய்ப் பழம் பூ தாம்பூலம் வைத்து
பாங்காகப் பலவித வழிபாடு செய்தேன்
நீங்காத நிம்மதி நீயெனக்கருள்வாய்
ஓங்காரப் பொருளே கேசவன் மருகனே
No comments:
Post a Comment