பேசும் தெய்வமே கேசவா
பல்லவி
கேசவா உந்தன் திருநாமம் என்நாவில்
ஓயாது உரைத்திடும் வரம் தரவேண்டும்
அனுபல்லவி
ஆசாபாசங்கள் அனைத்தையும் துறந்து
நேசமுடன் உந்தன் திருவடி நினைந்து
சரணம்
தேசுடை மூர்த்தியே விளக்கின் சுடரில்
வீசும் ஒளியே வாசமலரே
மாசிலாமணியே கலியுகந்தனிலே
பேசும் தெய்வமே ஆராவமுதே
No comments:
Post a Comment