ஶ்ரீ லக்ஷ்மிநாராயணி(11)
பல்லவி
எனக்கருள இன்னும் என்ன தயக்கம்
தனக்குவமையில்லாஶ்ரீ லக்ஷ்மிநாராயணி
அனுபல்லவி
சனகாதி முனிவரும் அரனயனும் கேசவனும்
மனிதரும் தேவரும் வணங்கிடும் அன்னையே
சரணம்
கனவிலும் நினைவிலும் உனையே நினைந்து
தினமுந்தன் திருநாமமாயிரம் துதித்தேன்
உனதிரு திருவடியே சதமெனப் பணிந்தேன்
கனகக்கோயிலில் வீற்றிருப்பவளே
No comments:
Post a Comment