கணபதி ( காணிப்பாக்கம் )
பல்லவி
கணபதியே உந்தன் கழலடி மறவேன்
காணிப்பாக்கம்தனில் கருணையுடன் வீற்றிருக்கும்
அனுபல்லவி
தணிகை வேலன் வள்ளியை மணந்திட
துணை புரிந்த தும்பிக்கையானே
சரணம்
வணங்கிடுமடியார்க்கு வரங்களையளித்திடும்
குணமிகு சித்திவிநாயகனுந்தன்
இணையடி நிழலே தஞ்சமென்றடைந்தேன்
அணைத்தெனையாண்டருள் கேசவன் மருகனே
No comments:
Post a Comment