காணிப்பாக்கம் ஆனைமுகன்
பல்லவி
காணிப்பாக்கம் கணபதியேயெனை
பேணிக்காக்க வேண்டுமெனத் துதித்தேன்
அனுபல்லவி
கேணியிலுதித்த வேழமுகத்தோனே
வேணுகோபாலன் கேசவன் நேசனே
சரணம்
வீணிலுலகினைச் சுற்றித் திரிந்தேன்
வாணாளனைத்தையும் பயனின்றிக்கழித்தேன்
தோணியப்பரும் உமையும் விரும்பும்
ஆனைமுகத்தோனே உன் மலரடி பணிந்தேன்
No comments:
Post a Comment