கோவிந்தன்/கேசவன்
பல்லவி
ஓடோடி வா கேசவா எனைக்காக்க
அனுபல்லவி
கோடானுகோடி தவம் செய்யும் முனிவர்களும்
தேடும் பொற்பாதனே தீனசரண்யனே
சரணம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் நேசனே
நாடிடும் அன்பர்க்கு நலமளிப்பவனே
ஈடிணையில்லாத கலியுகத்தெய்வமே
பாடிப் பரவசித்தேன் கோவிந்தா உன் நாமம்
No comments:
Post a Comment