மாரி
பல்லவி
மாரியே ஏகாம்ரேச்வரியே தாயே
பேரிடர் பவப்பிணி நீங்கிட அருள்புரி
அனுபல்லவி
பாரினில் நீயே துணையென நம்பினேன்
காரிகையே ஶ்ரீலலிதாம்பிகையே
சரணம்
நேரிழையே நீயே எனைக் கைவிட்டால்
யாரிடம் செல்வேன் எவரிடம் முறையிடுவேன்
வேறிடம் எனக்கில்லை கழலடி நிழலன்றி
தாரிணியே கௌரி கேசவன் சோதரி
No comments:
Post a Comment