ஶ்ரீமகாலஷ்மி
பல்லவி
அன்னையே உனையன்றி வேறு யாரென்துணை
பொன்மழை பொழிந்திடும் ஶ்ரீமகாலஷ்மி
அனுபல்லவி
உன்னைத்தன் மார்பில் வைத்திருப்பதாலன்றோ
கேசவனும் புகழோடு பூமியிலுள்ளார்
சரணம்
திருவேங்கடம் தனிலே அலமேலு மங்கையென்றும்
திருச்சானூர் பதிதன்னில் பத்மாவதியாகவும்
அருட்காட்சியளித்திடும் திருமகளே என்தாயே
கருணையுடன் எனைக்காக்க வேண்டுமெனத்துதித்தேன்
No comments:
Post a Comment