சென்னகேசவன்
பல்லவி
கண்கண்ட தெய்வம் நீயன்றி வேறில்லை
கலியுகந்தனிலே சென்ன கேசவா
அனுபல்லவி
அண்டசராசரங்களனைத்தையும் காத்திட
மண் மீது அவதாரம் பல எடுத்தவனே
சரணம்
கண்ணாலும் கருத்தாலும் எந்நாளும் எப்போதும்
புண்டரீகாக்ஷனே உனையே துதித்தேன்
கண்பார்த்தெனையே காத்தருள வேண்டி
பண்ணிசை பாடியுன் திருவடி பணிந்தேன்
No comments:
Post a Comment