லால்குடி சப்தரிஷீச்வரர்
பல்லவி
சப்தரிஷீச்வரரை மனமாரப் பணிந்தேன்
மாதா ஶ்ரீமதி மகிழ்வோடு அருகிருக்கும்
அனுபல்லவி
முப்பத்து முக்கோடி தேவரும் முனிவரும்
நந்தியும் கணங்களும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையும்
ஒப்புயர்வில்லா மாணிக்கவாசகரும்
முப்பொழுதும் துதித்துப் பாடிப் பரவிய
ஒப்பிலாமணியை கேசவன் நேசனை
No comments:
Post a Comment