கேசவன்
பல்லவி
ஆசையுடன் உனது அருட்கரம் நீட்டும்
கேசவன் நீயிருக்க எனக்கொரு குறையுமில்லை
அனுபல்லவி
நேசமுடன் செங்கமலம் அருகினில் துணையிருக்க
பாசமும் பரிவும் தயையும் எனக்களித்து
சரணம்
வாசமலர் மாலை வனமாலை மணிமாலை
தேசுடையபொன்மாலை துளபமுமணிந்தவனே
ஈசன் மல்லீச்வரரும் பிரமராம்பிகையும் போற்றும்
மாசிலாமணியே வைகுண்ட வாசனே
No comments:
Post a Comment