வரசித்தி விநாயகன்
பல்லவி
வரசித்தி விநாயகனை கரிமுகனை
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
நரர் சுரர் நான்முகன் அரனரி அனைவரும்
கரம் பணிந்தேத்தும் காணிப்பாக்கம்
சரணம்
கரமைந்துடையவனை வாரணமுகனை
சுரபதி வணங்கிடும் சுந்தர வடிவினனை
நிரந்தரமானவனை கேசவன் மருகனை
பரம்பொருளாகிய கலியக்க் கடவுளை
No comments:
Post a Comment