சித்தி விநாயகன்
பல்லவி
சித்தி விநாயகனைப் பணிந்தேன்
காணிப்பாக்கம்தனில் குடிகொண்ட - வர
அனுபல்லவி
நித்தியம் துதித்திடும் அடியவரெல்லாம்
சத்திய சத்திய நெறியில் நடந்திடச் செய்திடும்
சரணம்
சித்தர்கள் யோகியர் ஞானியர் துதித்திடும்
தத்துவப் பொருளை உத்தமிப் புதல்வனை
முத்தமிழ் கலைகளை ரசித்திடும் சுமுகனை
எத்திசையும் புகழ் விளங்கும் கேசவன் நேசனை
No comments:
Post a Comment