காணிப்பாக்கம் கணபதி
பல்லவி
காணிப்பாக்கம் கணபதியைப் பணிந்தேன்
கடைக்கண்ணருள் வைத்து காத்தருள வேண்டுமென
அனுபல்லவி
கேணியில் தானாகத் தோன்றிய கரிமுகனை
வரங்களையளித்திடும் சித்திவிநாயகனை
சரணம்
தேவரும் மூவரும் கணங்களும் நந்தியும்
சேவற்கொடியோன் முருகனும் முனிவரும்
யாவரும் வணங்கிடும் கேசவன் மருகனை
தேவாதி தேவனை வேழமுகத்தோனை
No comments:
Post a Comment