செங்கமலநாதன்
பல்லவி
செங்கமலநாதனே சென்ன கேசவனே
பங்கயபதம் பணிந்தேன் எனக்கருள் புரிந்திடுவாய்
அனுபல்லவி
பங்கயநாபனே பாற்கடல் வாசனே
அங்கமில் மன்மதனை ஈன்ற தாமோதரனே
சரணம்
மங்காத புகழ் மேவும் தென் சென்னைப்பதிதன்னில்
சிங்காரமாய் நின்று பக்தருக்கு காட்சி தரும்
பொங்கரவணிந்த சங்பரன் நேசனே
தங்கத்திருமகளைத் தன் மார்பில் வைத்திருக்கும்
No comments:
Post a Comment