பார்வதி
பல்லவி
பார்வதி உனையே அனுதினம் துதித்தேன்
பார்த்தெனக்கருள்புரி மனோரஞ்சனி
அனுபல்லவி
கார்த்திகேயன் அன்னையே கௌரி
கார்முகில் வண்ணன் கேசவன் சோதரி
சரணம்
நேர்த்திக்கடன் செலுத்தும் அடியார்க்கருள்பவளே
ஆர்ப்பரிக்கும் அலைகடல் அருகிலுறைபவளே
கீர்த்தி மிகு மருதேச்வரர் நாயகியே
பார்புகழ் உமையே பர்வதகுமாரி
No comments:
Post a Comment