ஶ்ரீலக்ஷ்மிநாராயணி
பல்லவி
அடைக்கலம் நீயே ஶ்ரீலக்ஷ்மிநாராயணி
கடைவழித்துணையென உனையே நம்பினேன்
அனுபல்லவி
இடையறாதுன் நாமமே துதித்து
அடியவன் கேசவன் உனைச்சரண்டைந்தேன்
சரணம்
படைத்தும் காத்தும் அழித்தும் முத்தொழில்
அனைத்தும் புரிந்திடும் லலிதாம்பிகையே
இடைசிறுத்தவளே அகிலாண்டேஸ்வரி
கடைக்கண் வைத்தெனைக் காத்தருள்வாயே
No comments:
Post a Comment