ரத்தினகிரி பாலமுருகன்
பல்லவி
பாலமுருகன் பாதம் பணிந்தேன்
பக்தனெனக்கருள வேண்டுமெனத்துதித்து
அனுபல்லவி
நீலமயில்வாகனன் கேசவன் மருகன்
கோலமிகு வள்ளி தெய்வானை லோலன்
சரணம்
ஞாலம் வலம் வந்த சண்முகநாதன்
நீலகண்டனுமை கொஞ்சிடும் பாலன்
வேலன் வினை தீர்க்கும் முத்துக்குமரன்
சீலமிகு ரத்தினகிரிதனில் நின்றருளும்
No comments:
Post a Comment