ஶ்ரீலக்ஷ்மிநாராயணி(9)
பல்லவி
ஆனந்தமாகவே நாமசங்கீர்த்தனம்
பாடியுனைத் துதித்தேன் லக்ஷ்மிநாராயணி
அனுபல்லவி
கானரசாம்ருதமும் ஞானமும் கல்வியும்
கேசவன் எனக்கருள மலரடி பணிந்து
சரணம்
மோனத்தவம் செய்யும் முனிவரும் ஞானியரும்
வானுறை தேவரும் பணிந்திடும் தாயே
தீனனெனக்கருள உனையன்றி யாருளார்
ஞானாம்பிகையே
(கௌரிமனோகரி, கமலாமனோகரி ,ஈசமனோகரி )
No comments:
Post a Comment