ஶ்ரீலக்ஷ்மிநாராயணி (10)
பல்லவி
பராசக்தி ஶ்ரீலக்ஷ்மிநாராயணியுன்
அரவிந்த பதம்தனை மனமாரப் பணிந்தேன்
துரிதம்
கராரவிந்தம்தனில் தாமரை மலரும்
முகாரவிந்தம்தனில் புன்னகையும் ஏந்திடும்
அனுபல்லவி
சுராசுரர்களும் முனிவரும் மூவரும்
புராணங்களும் போற்றும் அன்னையே
சரணம்
சராசரங்களை படைத்தும் காத்தும்
பராமரித்தும் அருள்பவளே தாயே
நிராதரவாக நிற்குமுன் பக்தன்
கேசவன் எனக்கருள வேண்டுமெனத்துதித்து
No comments:
Post a Comment