பூவனூர் சாமுண்டீச்வரி
பல்லவி
பூவனூர் வளர் ஶ்ரீசாமுணடீச்வரி
சேவடி பணிந்தேன் மனம் கனிந்தாதரி
துரிதம்
தேவரும் முனிவரும் நந்தியும் கணங்களும்
கணபதி முருகனும் கரம்பணிந்தேத்தும்
அனுபல்லவி
மூவடியாலுலகளந்த கேசவன் சோதரி
ராஜராஜேஸ்வரியின் அன்புத் தோழி
சரணம்
தேவியர் மலைமகளலைமகள் கலைமகள்
மூவரும் நீயே ஆதிபராசக்தி
மூவுலகும் படைத்த திரிபுரசுந்தரி
யாவரும் வணங்கிடும் ஶ்ரீலலிதாம்பிகே
No comments:
Post a Comment