ஶ்ரீலலிதாம்பிகை
பல்லவி
ஶ்ரீலலிதாம்பிகையின் கொலுசணிந்த பதம்தனை
சீலமிகு மீயச்சூர் திருத்தலத்தில் பணிந்தேன்
அனுபல்லவி
வேலனுக்கு வேல் தந்த திரிபுரசுந்தரி
ஞாலமுண்டவாயன் கேசவன் சோதரி
சரணம்
கோலவிழியாள் மறைபோற்றும் சங்கரி
நீலவானில் நீந்தும் வெண்ணிலவவள்
ஞாலமனைத்தையும் படைத்த மகேச்வரி
காலனையும் கலங்க வைக்கும் மாகாளி பைரவி
No comments:
Post a Comment