ஶ்ரீலக்ஷ்மிநாராயணி (5)
பல்லவி
பொற்கோவில்தனிலே வீற்றிருப்பவளே
கற்பகமே ஶ்ரீலக்ஷ்மிநாராயணி
அனுபல்லவி
சற்குண நிற்குணமாக விளங்கும்
துர்கா லக்ஷ்மி சரச்வதி தேவி
சரணம்
பற்பல வடிவில் எழுந்தருளிக் காட்சி தரும்
அற்புதமே ஶ்ரீலலிதாம்பிகையே
நற்கதி பெறவே பொற்பதம் பணிந்தேன்
அற்பன் கேசவன் எனக்கருள்வாயே
No comments:
Post a Comment