Friday, 30 September 2022

திரிபுரசுந்தரியின்……

 

                               திரிபுரசுந்தரியின்……


                                        பல்லவி

                      திரிபுரசுந்தரியின் மலர்ப் பதம் பணிந்தேன்

                      பரிவுடனே எனையே காத்தருள வேண்டுமென

                                     அனுபல்லவி

                      அரியயனரன் பணி கேசவன் சோதரி

                      விரிசடையோன் சதாசிவன் மீதமர்ந்தவளே

                                          சரணம்

                      பரிபூரணியே பர்வத குமாரியே

                      கருநிறத்தவளே காமனைக் காத்தவளே

                      சரி நிகர் சமானமொருவரில்லாதவளே

                      மரித்தலும் பிறத்தலுமில்லாதவளே

                                           துரிதம்

                      நரர் சுரரிந்திரன் சுகசனகாதியர்

                      நாரதரனைவரும் கரம் பணிந்தேத்தும்

      

போரூர்க் கந்தனை….

 

                 போரூர்க் கந்தனை….


                               பல்லவி

           போரூர்க் கந்தனை சுந்தரனைத் துதித்தேன்

           மேருவில் வீற்றிருக்கும் லலிதாம்பிகை மகனை

                              அனுபல்லவி

           ஆராவமுதன் கேசவன் மருகனை

           தாரகாசுரனை வதம் செய்த முருகனை

                                      சரணம்   

           ஈராறு கரமுடைய கார்த்திகேயனை

           ஆறுமுகனை சேவற்கொடியோனை

            ஏறு மயிலேறும் வள்ளி மணாளனை

            பாரோர் பலர் போற்றும் பாலகுமாரனை ( திருப்)

சங்கரி மைந்தனை…..

 


                        சங்கரி மைந்தனை…..


                                பல்லவி 

               சங்கரி மைந்தனை ஐங்கரனைப் பணிந்தேன்

               மங்களம் தரும் நவராத்திரி நந்நாளில்

                               அனுபல்லவி

               திங்கள் பிறையணிந்தவனைக் கேசவன் மருகனை

               பொங்கரவுதனை இடையிலணிந்மவனை

                                   சரணம்

                செங்கதிரோனைப் பழிக்குமொளியுடையவனை

                 கங்காதரன் மகனை ஆனைமுகத்தோனை

                 சங்கடமிடர்களையும் பங்கயப் பாதனை

                 முங்கிடச் செய்யும் பொங்கும் பவக்கடல் கடந்திட


Thursday, 29 September 2022

செம்பொன் மேனியனே


                                           செம்பொன் மேனியனே

                          பல்லவி
                  செம்பொன் மேனியனே புலித்தோலையணிந்தவனே
                  அம்புலி பிறையணிந்த எம்பெருமான் சிவனே
                         அனுபல்லவி
                  நம்புமடியார்க்கு இன்பமளிப்பவனே
                  அம்புய மலர் நாபனாதி கேசவனின் நேசனே
                           சரணம்
                  பம்பையுடுக்கையுடன் மான் மழுவுமேந்தி
                  பாம்பைக் கழுத்தணிந்த சம்பு கபாலீசனே
                  வெம்பவக் கடலினயே கடந்திட உன்னையல்லால்
                  அம்புவியில் வேறு யாரைத் துதித்திடுவேன்
                         
                                 
                  
                                    
                  

                  

நவதுர்கைகளை……

  NavaDurgas - Brahmi,  Maheshwari,  Kaumari,  Vaishnavi,  Varahi, Indrani,  Chamundi, 

MahaLakshmi and Rajeshwari. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாந்தா, குஷ்மாந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி: இவை தான் நவ துர்கைகளாவர். துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள். நவராத்திரியின் ஒன்பது இரவுகளில் வழிபடப்படுபவர்கள். பார்வதியின் பெயர்களில் சைலபுத்ரி ஒன்றாகும், இதன் பொருள் “மலைகளின் மகள்”. சிவனை அடைவதற்கு கடுமையாக வணங்கி பிரம்மச்சாரினி என்ற பெயரைப் பெற்றார். சந்திரகாந்தா என்றால் சிவனைப் போலவே தலையில் சந்திரனைத் தாங்கியவர் என்று பொருள். பிரம்மந்தா அல்லது பிரபஞ்சம் அனைத்தையும் கொண்டவர் குஷ்மந்தா என்று அழைக்கப்படுகிறார். ஸ்கந்தரின் தாயாக இருந்ததால், ஸ்கந்தமாதா என்ற பெயரைக் பெற்றார். மகரிஷி கத்யாயனாவின் மகள் என்பதால் அவருக்கு காத்யாயினி என்ற பெயரைக் கொடுத்தார். அவருடைய அழகான தோற்றத்திற்காக மஹாகௌரி என்ற பெயர் கொடுக்கப்பட்டது. இதேப்போல், சித்திதாத்ரி மற்றும் காளராத்திரி போன்ற பெயர்கள் அவரது பல்வேறு வடிவங்களுக்காகவும், சிந்திகளை வழங்கி, துன்பங்களை தீர்க்கக்கூடியவர் என விவரிக்கின்றன.

                                                          நவதுர்கைகளை……

                                                        பல்லவி

                                  நவதுர்கைகளை நாளும் நான் துதித்தேன்

                                  உவகையளித்திடும் ஒன்பது தேவியரை


                                  பவ பயம் பிணியிடர் கவலைகள் களைந்திட

                                  தவமுனியோர் வணங்கும் தகைமையுடைய


                                  புவனம் போற்றும் கேசவன் சோதரி

                                  ப்ராம்மி வாராகி இந்த்ராணி மகேச்வரி

                                  வைஷ்ணவி சாமுண்டி ராஜராஜேச்வரி

                                  மகாலக்ஷ்மி கௌமாரி என்னும்

Wednesday, 28 September 2022

முனைந்தந்தத் திருமாலை……

முதலாவதாக,  தேவர்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் சுவாசிப்பதற்கு காற்று, பார்ப்பதற்கு வெளிச்சம், பருகுவதற்கு நீர் என நமது எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர். இரண்டாவதாக,  நாம் ரிஷிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர்.  மூன்றாவதாக,  இதர உயிர்வாழிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். உதாரணமாக, பசுவிடமிருந்து பால் அருந்துவதால், பசுவிற்கு நாம் கடன்பட்டுள்ளோம். விவசாயத்திற்கு எருதின் சேவையை ஏற்கிறோம். அதைப் போன்று மற்ற விலங்குகளிடமிருந்து பல சேவைகளை ஏற்கிறோம். நான்காவதாக பித்ருக்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மூதாதையர்களின் ஆசியால் பிறப்பெடுத்த காரணத்தினால் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம். ஐந்தாவதாக குடும்ப அங்கத்தினருக்கு. தாய், தந்தை, சகோதரர், சகோதரி, சேவகன், கணவன், மனைவி, குழந்தைகள் எனப் பலரிடமிருந்து நாம் சேவையை ஏற்பதால், அவர்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளோம். 

ஆறாவதாக மனிதகுலத்திற்குக் கடன்பட்டுள்ளோம் விவசாயிகள், பால் கொண்டு வருபவர், காய்கறிகள் விற்பவர்கள் மற்றும் பலர் இவர்களுக்கு எந்த விதத்திலும் அடைக்க முடியாது

#கடனிலிருந்து #விடுபடுவது_எப்படி? இந்த ஆறுவித கடன்களையும் எந்த ஜென்மத்திலும் யாராலும் முழுமையாக அடைக்க முடியாது.  அப்படியெனில், இந்தக் கடன்களை அடைப்பதற்கான வழி என்ன

देवर्षिभूताप्तनृणां पितृणां
न किङ्करो नायमृणी च राजन् ।
सर्वात्मना य: शरणं शरण्यं
गतो मुकुन्दं परिहृत्य कर्तम् ॥ ४१ ॥

O King, one who has given up all material duties and has taken full shelter of the lotus feet of Mukunda, who offers shelter to all, is not indebted to the demigods, great sages, ordinary living beings, relatives, friends, mankind or even one’s forefathers who have passed away. Since all such classes of living entities are part and parcel of the Supreme Lord, one who has surrendered to the Lord’s service has no need to serve such persons separately

தேவர்ஷி-பூதாப்த–ந்ருணாம் பித்ரூணாம்

ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்

ஸர்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம்

கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்

"எல்லா கடமைகளையும் விட்டொழித்து, முக்தி அளிப்பவரான முகுந்தனின் பாதகமலங்களில் சரணடைந்து, தீவிர பக்தித் தொண்டு புரிபவர், தேவர்களுக்கோ முனிவர்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினர்களுக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்விதத்திலும் கடன்படுவதில்லை." புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்வதன் மூலம், அனைத்து கடமைகளும்  தாமாகவே நிறைவேற்றப்பட்டு விடுகின்றன. 



                                                        முனைந்தந்தத் திருமாலை……

                                                                  பல்லவி

                                                முனைந்தந்தத் திருமாலை நாராயணனை

                                                மனத்தினிலிருத்தி அனுதினம் துதிப்போம்

                                                                அனுபல்லவி

                                                அனைத்துமவனேயென  பரிபூரணமாய்

                                                 மனத்துள் நினைந்து அவன் பதம் பணிந்து    

                                                                    சரணம்                                                                                                                                                                                      

                                                அனைத்தும் விட்டொழித்துக் கேசவனைப் பணிவோர்

                                                மனைமக்கள் தேவர் முனி மூதாதையர் மற்றும்

                                                வினைப்பயனகளென எதற்கும் கவலை கொள்ளத் தேவையில்லை

                                                நினைத்தவனைப் பணிவோர்க்கு நலமனைத்துமவன் தருவான்                                                                                                                            

பொல்லாதவன்…..

 


                                          பொல்லாதவன்…..


                                              பல்லவி

                            பொல்லாதவன் எனையே  ஏன் படைத்தாய்  ( புவியில்)

                            மல்லீச்வரனே  மாதயாகரனே

                                             அனுபல்லவி

                            பல்லாண்டு பாடல் பெற்ற கேசவன் நேசனே

                            நல்லாள் பிரமராம்பிகையின் மனங்கவரீசனே

                                                   சரணம்

                            நல்லதொன்றும் நான் செய்யாதவன் மற்றும்

                            காமாதி அறுபகையை வெல்லாதவன் 

                            சொல்லாலும் மனதாலும் எந்நாளுமுந்தன்

                            கல்யாண குணங்களும் நாமமுரைக்காத   

                                                        

Tuesday, 27 September 2022

நடராஜனும் நாராயணனும்……


தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும் 
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - 
சூழும் திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் 
எந்தைக்கு இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து 

(மூன்றாம் திருவந்தாதி-பேயாழ்வார்).

சடைமுடியும், கையில் மழுவும், கழுத்தில் பாம்புமாக திருவேங்கடத்தான் இவருக்குத் தெரிகிறான். அப்படியே இருந்தால் தேவலை மீண்டும் பார்க்கும் போது நீண்ட முடியும், கையில் சக்கரமும், பொன்னால் செய்த ஆபரணங்கள் தரித்த திருமாலாகத் தோற்றம் தருகிறான். பண்டைத் தெய்வங்களும், மரபுகளும், நம்பிக்கைகளும் கையோடு கைகோர்த்து இளநடை பழகும் காட்சி இப்பாசுரத்தில் அற்புதமாய் வந்து நிற்கிறது. திருவேங்கடத்தான் இப்படியெனில் தில்லைக் கூத்தன் எப்படி இருக்கிறான் என்கிறீர்கள்?

இடம் மால் வலம்தான்; இடப்பால் துழாய்
  வலப்பால் ஒண்கொன்றை
வடமால்; இடம் துகில் தோல் வலம்
  ஆழி இடம் வலம்மான்
இடமால் கரிதால் வலம் சேது
  இவனுக்கெழில் நலஞ்சேர்
குடமால் இடம், வலம் கொக்கரை
  யாம் எங்கள் கூத்தனுக்கே
பொன்வண்ணத்தந்தாதி-சேரமான் பெருமாள் நாயனார்) இடதுபுறம் திருமால், திருத்துழாய் (துளசி). துகிலாடை (பீதாம்பரம்), சுடராழி (சக்கரம்), கரிதால் (கரிய நிறத்தவனான கண்ணன்); வலது சேது (சிவப்பான சிவன்), கொன்றை, புலித்தோல், மான். இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து...... 

                  நடராஜனும் நாராயணனும்……

                         பல்லவி
                  நடராஜனும் நாராயணணுமொன்றே
                  நடமிடும் சிவனே குடமாடும் கூத்தன்

                        அனுபல்லவி
                  விட அரவணிந்தவன் பரமேச்வரன்
                  பட அரவணையில் துயில்பவன் கேசவன்
                         சரணம்
                  இடப்பாதி மங்கைக்குத் தந்தவனீசன்
                  மடந்தையை மார்பில் சுமப்பவன் திருமால்
                  வடக்கே கயிலாய மலைமீதமர்ந்தவனே
                  வட வேங்கடமலையில் காட்சியளிப்பவன்


                         

ஶ்ரீ காஞ்சி…….

 


                                            ஶ்ரீ காஞ்சி…….


                                                பல்லவி

                                    ஶ்ரீ காஞ்சி நகர நாயகியே

                                    ஏகாம்ரேச்வரி கேசவன் சோதரி     

                                            அனுபல்லவி                                                                                                              

                                   மூகாம்பிகை நீயே  சிவே பவானி

                                   ஏகாம்ரேசவரன் ப்ரிய சகி கல்யாணி

                                                   சரணம்

                                   மாகாளி பைரவி மாதங்கி மாலினி

                                   மாயாமாளவ கௌள ராகப்ரியே

                                   ஆகம வேதப் பொருளே மாயே

                                   ஆதரித்தெனையே ஆண்டருள்வாயே


   

Monday, 26 September 2022

முப்பெருந்தேவியரை…..





                                           முப்பெருந்தேவியரை…..

                                                     பல்லவி
                                    முப்பெருந்தேவியரைத் துதிப்பவர்க்கெல்லாம்
                                    செப்பமுடன் சீரும் சிறப்பும் சேரும்
                                                     அனுபல்லவி
                                    இப்பிறப்பில் செல்வமும் கல்வியும் நல்வாழ்வும்
                                    ஒப்புயர்வில்லாத பெருவாழ்வும் கிடைத்திடும்
                                                          சரணம்
                                    முப்புரமெரித்த திரிபுரசுந்தரி கேசவன் சோதரி
                                    இப்பிரபஞ்சமே போற்றும் மாகாளி
                                    ஒப்பிலாத்திருமகள் சமுத்திர குமாரி
                                     தப்பிலா அறிவளிக்கும் மகா சரஸ்வதி

Sunday, 25 September 2022

கோவலூர்….

 வாய்மொழிந்து வாமனனாய்*  மாவலிபால்,*  மூவடிமண்

நீஅளந்து கொண்ட நெடுமாலே,* - தாவியநின்
எஞ்சா இணைஅடிக்கே*  ஏழ்பிறப்பும் ஆளாகி,* 
அஞ்சாது இருக்க அருள். 



                                                                                          கோவலூர்….


                                                                                                பல்லவி

                                                                      கோவலூர் தனிலே கோவில் கொண்டிருக்கும்
                                                                      பூவண்ண மேனியனே   தேகளீசனுனைப்  பணிந்தேன்

                                                                                              அனுபல்லவி

                                                                      பாவை பூங்கோவல் நாச்சியாரைத் தன் மார்பில்
                                                                      பூவென வைத்திருக்கும் திருமாலே கேசவனே
                                                                      
                                                                                                    சரணம்

                                                                      மாவலியிடம் சென்று மூவடி மண் கேட்டு
                                                                      தாவி நீயளந்த இணையிலா உன் சேவடியை
                                                                      மேவியே பற்றி எழ் பிறப்புமுனைத் துதித்தேன்
                                                                      பாவியேன் எனை நீயே ஆண்டருள்வாயே
                                                                        
                                                                      

Saturday, 24 September 2022

செய்த பாவங்களனைத்தும்……

 


                                           செய்த பாவங்களனைத்தும்……


                                                   பல்லவி

                               செய்த பாவங்களனைத்தும் தொலைந்திடும்

                               மெய்யுருருகி வேங்கடவன் கேசவனைத் துதித்தால்

                                                 அனுபல்லவி

                                பையத்துயுலுமந்தப் பரமனடி பாடி

                                வையத்திலவன் நாமமனுதினமுரைப்போர்க்கு   

                                                       சரணம்

                                பொய் புரட்டு திருட்டெனவே தீயசெயல் மற்றும்

                                செய்யாதன செய்யாது தீக்குறளையோதாது

                                மெய்ப்பொருளவனையே தினமும் நினைந்து

                                கை தொழுது வேண்டி திருவடி பணிவோர்க்கு

                                 

                                                                                          

சக்தியே……

 


                                                       சக்தியே……


                                                         பல்லவி

                                         சக்தியே நானுன்னைப் பலகாலம்

                                         பக்தியுடன் பாடித் துதித்தேனே

                                                        அனுபல்லவி

                                         சக்கரக்கையன் கேசவன் சோதரி  

                                         சிக்கல் சிங்கார வேலனின் அன்னையே

                                                            சரணம்                                                            

                                         பக்தருக்கருளும் பராசக்தியே

                                         அக்கறையுடனே பதமலர் பணித்தேன்         

                                         உக்தி உபாயம் வேறொன்றறியேன்                                                                         

                                         முத்தி பெற வேண்டியே உனைப் பணிந்தேன்                                         

                                          

கைவிடலாகுமோ……

 



                                  கைவிடலாகுமோ……


                                       பல்லவி

                      கைவிடலாகுமோ கேசவா எனை நீயே

                      செய்யாதன செய்யாமல் திருவடி பணிந்தேன்              

                                     அனுபல்லவி

                      பையத்துயில் கொண்ட பாற்கடல் வாசனே

                      மையிருட்டு நிறத்தோனே மதுசூதனனே       

                                         சரணம்

                      மெய்யான பக்தியுடன் உனையே துதித்தேன்

                      பொய்யான வாழ்விது என்றறிந்து தெளிந்தேன்

                      வையத்திலே  கருப்பையில் பிறவாமல்

                      ஐயனே எனை நீ ஆட்கொள்ள வேண்டினேன்                       




சாது ஜனங்களை…..



                                             சாது ஜனங்களை…..


                                                   பல்லவி

                                     சாது ஜனங்களைக் காத்தருளும்

                                     சண்முகநாதனை தினம் துதித்தேன்

                                                     துரிதம்

                                     பூத கணங்கள் நந்தி இந்திரன்

                                     பாதம் பணிந்திடும் முத்துக்குமரனை

                                                  அனுபல்லவி

                                     சேதுவையமைத்த கேசவன் மருகனை

                                     ஆதிசிவன் மகனை ஆறுமுகனை

                                                        சரணம்

                                     வேதங்கள் கொண்டாடும் வேலாயுதனை

                                     தீது பல செய்த சூரனையழித்து

                                     ஆதரவுடனே அமரரைக்காத்தவனை

                                     பூதலம் போற்றும்  கார்த்திகேயனை

                                      

                                     


என் இனிய பொன் நிலாவே

 

                என் இனிய பொன் நிலாவே


                          நிலவே வான் நிலவே நீ ஏன்

                          தொலைவிலிருந்து கொண்டெனை

                          அலைக்கழிக்கிறாய்  நான் பார்க்கும் 

                          சில நேரங்களில் நீயோ

                          மேகங்களுள் மறைந்து கண்ணாமூச்சி ஆடுகிறாய்

                          நலம் கேட்டு நானழைக்கும் போதோ

                          சில நாள் காணாமல் மறைகிறாய்

                          மலரே தேனே என்றழைத்துப் பேச வந்தால்

                          கலகம் செய்தெனை நிலைகுலையச் செய்கிறாய்

                          புலவரும் கவிஞரும் போற்றிப் பாடும் 

                          நிலவே வெண்ணிலவே உன்னோடு

                          சல்லாபம் செய்வதரிது

Friday, 23 September 2022

கனிந்தருள்…..

 சிவ காலை வணக்கம்

பாடல் எண் : 06

*****************

சிட்டர் வானவர் சென்று வரங்கொளும் 

சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலத்து உறை 

சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச் 

சிட்டர்பால் அணுகான் செறு காலனே.

பொருள்:

***********

முனிவர்களும் தேவர்களும் சென்று, வேண்டிய வரங்களைக் கொள்ளும் இடமாவது, அந்தணர்கள் வாழும் தில்லைச்சிற்றம்பலம். ஆங்கும் உறையும் நடராசப் பெருமானுடைய செம்மையான அடிமலரைத் தொழுது ஏத்தச்செல்கின்ற மெய்யன்பர்கள்பால், காலன், அணுகமாட்டான்.



                                                      கனிந்தருள்…..


                                                           பல்லவி

                                       கனிந்தருள் புரிந்திடுமீசனைத் துதித்தேன்

                                       இனிப்பிறவா வரம் பெற வேண்டியே

                                                             துரிதம்

                                       நந்தி கணங்கள் இந்திரன் மன்மதன்

                                       மந்திரமோதும் அந்தணர் மறைகள்

                                       கந்தன் கணபதி வணங்கிடுமரனை


                                                         அனுபல்லவி

                                       புனிதனைப் புண்ணியனைக் கேசவன் நேசனை

                                       வனிதை பார்வதிக்கொரு பாதி தந்தவனை

                                                               சரணம்

                                       முனிவர்களும்  தேவர்களும்  அயனரியும் மற்றும்

                                       சனி பாம்பிரண்டுடனே கோள்களனைத்தும்

                                       பனிதரும் திங்களும் பாகீரதியும்

                                       இனிது வணங்கிடும் பனிமலை நாதனை

                                       


 

குருவாயூர் கண்ணனை……

குருவாயூர் கண்ணனிடம்

ஒருநாள் யாருக்கும் தெரியாமல் கேள்வியொன்று கேட்டேன்

உண்மையைச் சொல்லவேண்டும் 

பூந்தானத்தின் ஞானப்பானயா

நாராயணீயமா? இரண்டில்

எது உனக்கு மிகவும் இஷ்டம்?

ஒரு நொடி சிந்தித்தவன்

ஒரு கள்ள புன்சிரிப்பையே

எனக்கு பதிலாகத் தந்தான். 

மற்றொரு நாள் ஊட்டுப்புரை

மாளிகையில்

சப்தாஹ யக்ஞத்தில் 

அவனைக் கண்டு

மீண்டும் கேட்டேன் 

நாராயண நாமசங்கீர்த்தமா

செம்பை சங்கீதமா? 

எதில் இஷ்டம் அதிகம்?

ஒருநொடியும் யோசிக்காது  

அவனிடமிருந்து கிடைத்த பதில்

அவன் விழிகளில் 

நிறைந்திருந்த புன்னகை மாத்ரமே.

ஒரு நாளிரவு கோவிலில்

அவனைக் கண்டதும் 

மற்றொரு கேள்வியுடன்

அருகில் சென்றேன்.

குரூரம்மையின் தொட்டிலில்

ஆடுவதா? அல்லது கிருஷ்ணாட்டமா?

எது உனக்கு 

மிகவும் பிடிக்கும்?

மந்தஹாசத்தோடு

கூடிய ஒரு கள்ளப் பார்வையே

அவன் பதிலாக இருந்தது.

ஊட்டுபுர - பக்தர்களுக்கு உணவளிக்கும் இடம்.  

பி.கு: உனக்கு அவளைத்தானே பிடிக்கும் என்று இவளும், இவளைத்தானே பிடிக்குமென்று அவளுமாக இரண்டு பெண்களும் என்னை வம்பிழுக்கும்போது நான்கூட இப்படித்தான் சிரித்து மழுப்பியிருக்கிறேன்.


                                               குருவாயூர் கண்ணனை……


                                                            பல்லவி

                                     குருவாயூர் கண்ணனை ஒருநாள் நான் கேட்டேன்

                                     திருவாய் மலர்ந்தருளி கேசவனே உரைப்பாயென

                                                         அனுபல்லவி

                                     இரு வினை தீர்ப்பவனை இடர்கள் களைபவனை

                                     குருவாயுரப்பனை ஶ்ரீமன் நாராயணனை

                                                           சரணங்கள்

                                     குரு நாராயண பட்டத்திரி எழுதிய 

                                     நாராயணீயமா பூந்தானம் புனைந்த

                                     ஞானபானயா உனக்கு எது அதிகம்

                                     பிரியமென்று கூறென்று ஆவலுடன் நானும்……..


                                     ஒரு நொடி கண்ணிமைத்து யோசிப்பவன் போல

                                     இரு கண்ணும் விரித்து எனைப் பார்த்தவனும்

                                     மறு மொழியெதுவும் கூறாமலே….

                                     கள்ளச்சிரிப்பாக புன்முறுவல் செய்தான்


                                     பிறிதொரு நாள் ஊட்டுப்புரை சப்தாகம் நடுவே

                                     அரியவனை நாராயண நாம சங்கீர்த்தனமா

                                     செம்பையின் கானமா எது உனக்கு அதிகம்

                                     பிரியமென்று கூறென்று  ஆவலுடன் நானும்……..      

 

                                     ஒரு கணமும் சிறு துளியும் யோசிக்காமலே

                                     திருமுகத்தில் மாற்றமெதுவுமில்லாமலே

                                     மறு மொழியெதுவும் உரைக்காமலே

                                     புன்சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தான்


                                     மற்றொரு நாள் நள்ளிரவு கோவிலருகில்      

                                     இன்னொரு கேள்வியுடனருகில் சென்றேன்                              

                                     குரூரம்மை தொட்டிலிலாடுதோ இல்லை

                                     கிருஷ்ணாட்டமா உனக்கெது பிரியமென்று


                                     திருமுகத்தில் மாற்றமெதுவுமின்றி

                                     கருணை பெருகும் இருவிழியுடனே

                                     ஒரு கள்ளப் பார்வையெனைப் பார்த்து

                                     மறுமொழியாய் மீண்டும் புன்னகை செய்தான்

           

                                                                              

   


                  

                                                          

  

                                     

Thursday, 22 September 2022

அண்ணாந்து…….

 *மண்ணாள நின்றவர் தம்*    *வாழ்வு* *வேண்டேன்...*

*மற்றவர் போல் பற்றடைந்து*   *மாள வேண்டேன்...*

*விண்ணாள நின்ற ஒரு*    *மேன்மை* *வேண்டேன்...*

*வித்தக நின் திருவருளே*   *வேண்டி* *நின்றேன்...*

*புண்ணாள நின்ற*       *மனமுடையேன்*

*பொய் அனைத்தும்*    *திருவுளத்தே* *பொறுப்பாய்*

*கண்ணாள சுடர்*         *கமலக் கண்ணா*

*எனைக் கைவிடில்*      *என்ன செய்வேன்*     *கடையவனேன்...*


                                                     அண்ணாந்து…….


                                                                 பல்லவி

                                            அண்ணாந்து பார்த்துந்தன்னடி தொழுதேன் கேசவா

                                            அண்ணாமலையினடி தேடிய திருமாலே

                                                              அனுபல்லவி                                                                 

                                            பண்ணாயிரம் பாடியுனைத் துதிக்க வரமருள்வாய்          

                                            உண்ணாமுலையம்மை சோதரனே மாதவனே

                                                                   சரணம்              

                                            மண்ணாளுமரச  வாழ்வெதுவும் வேண்டேன்

                                            விண்ணாளுமிந்திரப் பதவியும் வேண்டேன்

                                            பெண்ணாசைப் பேராசை கொண்டலையும் சில

                                            அண்ணாவி போலலைந்து  மடியும் வாழ்வு வேண்டேன்


                                            புண்ணியம் செய்யாத பொய் மட்டுமே உரைக்கும்

                                            கண்ணியமில்லாத  என் பிழை பொறுத்து

                                            தண்டனிட்டுப் பணியுமெனைக் கைவிடாதிருக்க வேண்டி                              

                                            கண்ணாளா சுடர் கமலக் கண்ணா……                            


     

கான மயூரியை…….

   


                        கான மயூரியை…….

                பல்லவி

கான மயூரியை கௌரியைத் துதித்தேன்
கோனந்த மலையரசன் மகளைப் பார்வதியை

            அனுபல்லவி

வானவர் தானவர் அயனரனரியும்
மோனத்தவம் செய்யும் முனிவரும் பணிந்தேத்தும்

                 சரணங்கள்

தேனார் மொழியாளைக்  கேசவன் சோதரியை
மானைப் பழிக்கும் அழகு விழியுடையாளை
மின்னல் இடையாளை மீனாக்ஷி தேவியை
பன்னகாபரணியைப்  பராசக்தியை

நவசக்கரத்தமர்ந்து நாதமாயிருப்பவளை
ஓங்காரப் பொருளை அமுதளிப்பவளை
ச்ருங்கார ரசத்தின் ஆதாரமானவளை
சங்கரன் மடியிலமர் பங்கயத்தை சங்கரியை

கணபதி முருகன் சிவனுடனுறைபவளை
பஞ்சகோசத்தின் உட்பொருளானவளை
ஆகம வேத சாத்திரப் பொருளை
சிந்தாமணி வீட்டிலமர்ந்திருப்பவளை
 
மந்தார மரத்தடியே வீற்றிருப்பவளை
சிந்தூரமணிந்த சிவகாமேச்வரியை
மந்திரப் பொருளாகி மாமேருதனிலமர்ந்த
சுந்தரியை ஶ்ரீ லலிதாம்பிகையை

 

 



அமையும்ப்பனும்…..

 

                                         அமையும்ப்பனும்…..


                                                பல்லவி

                               அம்மையுமப்பனும் சேர்ந்தாடுமழகை

                               நிம்மதியுடனே  கண்டு களித்தேன்        

                                              அனுபல்லவி

                               இம்மைக்கும் மறுமைக்கும் இடையுள்ள காலத்தில்

                                நம்மை மகிழ்விக்க இம்மாயத் தரணியில்

                                                 சரணம்

                               பெம்மான் சிவனுடன் கேசவன் சோதரியென்

                                அம்மை உமையும் இதமுடன் பதம் வைத்து

                                இம்மாநிலம் காண இசையோடு ஜதியோடு

                                 நம் முன்னே கண்ணெதிரே நாம் காணும் வண்ணம்

                                  

                                

புதுப்பாடல்………

 


                     புதுப்பாடல்………


                                பல்லவி

                  புதுப்பாடல் பாடிட ஓரடியெடுத்துக் கொடுப்பாயே

                  மதுசூதனனே மாயனே கேசவனே

                              அனுபல்லவி

                  மதுகைடபரை வதைத்தவனே மாதவனே

                  யதுகுலதிலகனே  ஶ்ரீ பதுமநாபனே

                                  சரணம்                   

                  எதுகை மோனையுடன் சந்தங்களுடனே

                  பதங்களை இலக்கண விதியுடனமைத்து

                  புது புது ராகங்களில் விதம் விதமாகவே

                   மதுர கானங்கள் இசைத்திட வசதியாய்