வன்மீக நாதனை…..
பல்லவி
வன்மீகநாதனை வணங்கி வேண்டினேன்
என்குறை கேட்டு எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
பன்னகசயனன் கேசவன் நேசனை
பன்னகபூஷணனை புற்றிடங்கொண்டானை
சரணம்
சின்ன வயதில் நானறியாமல் செய்த பிழை
இன்னலாய் வந்தின்று முன்வினைப் பயனாய்
என்னை வாட்டிடச் செய்யாமலிருந்திடவே
மன்னு புகழ் திருவாரூர் தலம் வளர் ஈசனை
No comments:
Post a Comment