#ஆன்மீகம்
பராசக்தியின் அன்புக்கு பாத்திரமான புதல்வனே
பரமேஸ்வரன் முக்கண்ணனின் மூத்த புதல்வனே
பன்னிருகை வேலனுக்கு பிரியமான சோதரனே
பச்சைமாமலை மேனியன் பக்தவத்சலனின் மருகனே
பல ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கும் எனக்கு இஷ்ட தெய்வமே
பக்கத்தில் இருந்து எனக்கு வழிகாட்டி பாதுகாப்பவனே
பரிபூரணமாக உன்மேல் பக்தி செலுத்த அனுகிரகித்தவனே
பக்தியோடு நான் எழுதி சமர்ப்பிக்கும் பாமாலையை விரும்புவனே
பந்த பாசம் துறந்து உன் கமலபாதங்களில் சேர்ந்திட காத்திருக்கேன்
பாசத்தோடு எனை எடுத்து அரவணைத்து உன்னோடு சேர்த்து கொள்வாய்
பக்தரக்ஷகா ! கருணை கடலே ! என் இஷ்ட தெய்வமே ! பாலவிநாயகா ! சரணம் !
பால விநாயகன்…..
பல்லவி
பால விநாயகன் பாதம் பணிந்தேன்
ஞாலமுண்ட வாயன் கேசவன் மருகன்
அனுபல்லவி
கால காலனும் பார்வதியும் கொஞ்சும் மகன்
நீல மயில்வாகனன் குமரன் சோதரன்
சரணம்
மூலப் பொருளானவன் என்னிஷ்ட தெய்வம்
கோலமுடனருகிருந்து வழிகாட்டுமானை முகன்
சீலமுடன் படைக்குமென் பாமாலை ரசிப்பவன்
பூலோக பந்தங்களை விடுத்தவன் பதம் சேர
துரிதம்
பூரணம் பொதிந்த மோதகப்பிரியன்
காரணப் பெயர் கொண்ட வாரணமுகனவன்
சரணம் சரணமடைந்த அடியர்க்கு
வரம் தரும் கரிமுகன் கரமைந்துடையவன்
No comments:
Post a Comment