தாயே நான்….
பல்லவி
தாயே நான் முறையிட உனையன்றி யாருளார்
பரிந்தெடுத்தணைத்தாலும் வெறுதொதுக்கி வைத்தாலும்
அனுபல்லவி
நீயேயென் துணை கேசவன் சோதரி
மாயே ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
சரணம்
ஓயாதுனையே அனுதினம் துதித்தேன்
மாயையே மறைபொருளே மாமுனிவர் வணங்கிடும்
தூயவளே ஶ்ரீ புரந்தனிலுறைபவளே
மீயச்சூர் தலத்தில் மேருவிலமர்ந்தவளே
No comments:
Post a Comment