தங்கநிற மேனியை….
பல்லவி
தங்கநிற மேனியனை சங்கரனைத் துதித்தேன்
பொங்கரவணிந்தவனை கேசவன் நேசன்
துரிதம்
அங்காரகனுமனைத்துக் கோள்களும்
சிங்காரவேலன் கணபதி நந்தி
பங்கயநாபன் பிரமன் சுரபதி
கங்கை கணங்ககள் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
கங்கையும் திங்களுமணிந்த ஜடாதரனை
மங்கை பங்கனைப் பார்வதி நாயகனை
சரணம்
செங்கதிரோனொளியை மிஞ்சும் தேசுடையவனை
அங்கமில் மன்மதனை எரித்த காமேச்வரனை
சங்கராபரண ராகம்தனை விரும்பும்
மங்கள நாதனை மகாதேவனை
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
பங்கயப் பாதனைப் பரமேச்வரனை
முங்கிடச் செய்யும் பொங்கும் பவக்கடல் கடந்திட
எங்களுக்குதவிடும் காபலீச்வரனை
No comments:
Post a Comment