மதுரகாளி நீயே….
பல்லவி
மதுரகாளி நீயே மனங்கனிந்தருள்வாயே
கதியெனவே உனது தாள் பணிந்து துதித்தேன்
அனுபல்லவி
சதுர்மறையும் இதிகாச புராணங்களும் போற்றும்
பதுமையே பரிமளமே கேசவன் சோதரி
சரணம்
புதுப் புது அவதாரம் பல எடுத்தவளே
மதியணிந்தவளே மரகத நிறத்தாளே
மாதங்கியெனும் பெயருடையவளே
ஆதரித்தெனையே ஆண்டருள்வாயே
துரிதம்
சதுர்முகனிந்திரன் சுகசனகாதியர்
சதுர்புஜன் வேலன் நந்தி கணங்கள்
எதிர் நின்று துதித்திடும் சிறுவாச்சூர் வளர்
மதுரமொழியாளே மாகளி பைரவியே
No comments:
Post a Comment