முதல் அத்தியாயம் : அஸிந்த்யா வ்யக்தரூபாய நிர்குணாய குணாத்மநே
ஸமஸ்த ஜகதாதார மூர்த்தயே ப்ரஹ்மணே நம: 1.
( சிந்தனைக்கு அப்பாற்பட்ட வெளிப்படையான உருவம் இல்லாத
குணங்களுக்கு ஆதாரமாக இருந்தும்
தன்னில் குணங்கள் ஏதும் இல்லாத அனைத்து பிரபஞ்சங்களுக்கும்
ஆதார் வடிவமாக திகழும் பிரம்மத்தை வணங்குகிறேன் )
ஹரிஓம் நன்றாக குரு வாழ்க.... Thanks ! Padmanabhan Seshadri
அனைத்துக்கும்……
பல்லவி
அனைத்துக்குமாதாரம் ஆன பரம்பொருளை
தனக்குவமையில்லாதான் கேசவன் தாள் பணிந்தேன்
அனுபல்லவி
மனம் வாக்கு காயமென அனைத்திலும் நினைந்து
கனவிலும் நினைவிலும் என்னாளுமெப்போதும்
சரணம்
நினைவுக்கும் புத்திக்குமெட்டாத பரம்பொருளை
தனக்கென ஓர் உருவமில்லாத பொருளை
குணமேதுமில்லாத குணத்திற்காதாரமான
அண்டங்களுக்காதாரவாய்த் திகழும் பரப்ரம்மத்தை
No comments:
Post a Comment