பார்த்தேன்!ரசித்தேன்! பாடல் புனைந்தேன்! ( இதோ என் Instant பாடல்)
கண்ணா வா….
பல்லவி
கண்ணா வா மணிவண்ணா வா
தண்டை கால் கொலுசுகள் கிண்கிணியென்றொலிக்க
அனுபல்லவி
தண்மதி முகத்தோனே தாமரை நாபனே
கண்ணசைவில் கலிதீர்க்குமழகுக் கேசவனே
சரணம்
குண்டலங்களிரண்டும் காதில் குழைந்தாட
வெண்ணையுண்ட வாயனே வேய்ங்குழல் வேந்தனே
வெண்முத்துமாலையும் தோள்வளையும் குலுங்க
கண்மை கரைந்தோட வெண்பட்டுடையோடு
மண்ணையுண்ட வாயில் அண்டம் தனைக் காட்டித்
தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரனே
கண் கவரழகனே மயில் பீலியணிந்தவனே
புண்ணியம் செய்தோர்க்குக் கண்ணெதிரில் காட்சி தரும்
No comments:
Post a Comment