பார்த்தேன்!ரசித்தேன்!பாடல்புனைந்தேன்!
பேசும் தெய்வம்….
பல்லவி
பேசும் தெய்வம் கற்பகாம்பிகையை
வாச மலர் தூவி கமல பதம் பணிந்தேன்
அனுபல்லவி
கேசவன் சோதரி திரிபுரசுந்தரி
மாசிலாக்கபாலியின் மனங்கவரன்னை
சரணம்
நேசமுடன் ஆசி கூறி எனக்குரைத்தாள்
பாசமுடன் இரு சொட்டுக் கண்ணீர் சிந்தி
ஆசையுடன் எனைப்பணியும் அடியார்க்கெல்லாம்
ஈசன் துணையிருந்து
கூட வருவானென்றாள்🙏🙏🙏
No comments:
Post a Comment