அவனிடமுரைத்தேனென்…..
பல்லவி
அவனிடமுரைத்தேனென் அவதிகளனைத்தையும்
சிவனிடமுரைத்தபின் சிவனே என்றிருந்தேன்
அனுபல்லவி
தவறு தப்பு பிசகு பிழையென
அவனியில் நான் செய்த கருமங்களனைத்தையும்
சரணம்
தவயோகியர்களும் ஞானியரும் முனிவர்களும்
சிவனடியார்களும் பிற தெய்வங்களும் பணியும்
புவனம் போற்றும் கேசவன் நேசன்
அவனன்றி வேறு யார் எனக்கருளக் கூடும்
No comments:
Post a Comment