#ஆன்மீகம்
அஷ்ட புஜங்களில் ஆயுதம் ஏந்தி மக்களை காப்பவளே
அழகிய விந்திய மலையில் வாசம் செய்பவளே
அயன் அரி போற்றிடும் அம்பிகையே
அரவு அணிந்த ஹரனுக்கு பிரிய நாயகியே
அசுரர்கள் மது கைடபரை அழகால் மயக்கி கொன்றவளே
அன்னையாய் நின்று திரிபுவனங்களையும் ரக்ஷிப்பவளே
அபயம் என அடிபணியும் அடியவர்களை பாதுகாப்பவளே
அல்லல் தரும் தேஹ மன துயரங்களை களைபவளே
அற்புதமான இசை நடன நாட்டியங்களை ரசிப்பவளே
அஷ்டமி திதி குருவாரத்தில் உனை ஜெய ஜெய ஹே மகிஷாசுரமர்த்தினி என போற்றி நெய் விளக்கேற்றி பூமாலை சாற்றி பணிகிறேன்
அன்னையே துர்க்கையே மகிஷாசுரமர்த்தினி என் பிணிகளை போக்கிடுவாய்
அன்னையே…
பல்லவி
அன்னையே துர்க்கையே மகிஷாசுரமர்த்தினியே
உன்னையே துதித்திடும் என் பிணி போக்கிடுவாய்
அனுபல்லவி
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் மூத்தவளே
பன்னகசயனன் கேசவன் சோதரியே
சரணம்
எண்கரத்திலாயுதமேந்தி எமைக் காப்பவளே
கண்கவரழகால் மதுகைடபரையழித்த
பெண்ணணங்கே பேரழகே அடியார்க்கருள்பவளே
வண்ணமிகு இயலிசை நாட்டியங்கள் ரசிப்பவளே
கண்மணியே அரவணிந்த பெம்மான் மனங்கவரும்
தண்மதியணிந்தவளே மூவுலகும் காப்பவளே
என் மன உடல் பிணி இடர்கள் களைபவளே
பண்ணிசைத்துப் பாடியுனை மனமாரத் துதித்தேன்
துரிதம்
“அட்டமி திதியில் குருவாரத்தில்
மாலைகள் சாற்றி நெய் விளக்கேற்றி
ஜெய ஜெய ஹே மகிஷாசுரமர்த்தினி
துர்கா தேவி உனையே துதித்தேன்”
No comments:
Post a Comment