நீலகண்டதீட்சிதர், அன்னை மீனாட்சியை துணைக்கு அழைத்த மாதிரி! ஆனந்த ஸாகர ஸ்தவம் என்ற தனது நூலில், அவர், ""அம்மா மீனாட்சி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம்.
சகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும், உன்னிடம் கஷ்டங்களை வாய்விட்டு சொல்லாவிட்டால், மனம் புண்ணாகிறது.
வாய்விட்டுச் சொல்லிவிட்டாலோ தற்காலிகமாக ஒரு ஆறுதலாக, தெம்பாக இருக்கிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன்,'' என்கிறார்.
நாமும், நம் கஷ்டங்களை தெய்வத்திடம் முறையிட்டு மனதில் இருக்கும் பாரத்தைக் குறைப்போம். மனச்சாந்தி பெறுவோம்.
விஜ்ஞாபநார்ஹவிரலாவஸராநவாப்த்யா
மந்தோ³த்³யமே மயி த³வீயஸி விஶ்வமாது: ।
அவ்யாஜபூ⁴தகருணாபவநாபவித்³தா⁴-
ந்யந்த: ஸ்மராம்யஹமபாங்க³தரங்கி³தாநி ॥ 1 ॥
தாயே மீனாக்ஷி……
பல்லவி
தாயே மீனாக்ஷி நீயறியாததா எனினும்
நாயேன் நயந்துரைத்தேன் செவி கேளாய்
அனுபல்லவி
ஓயாதுன் பாதமே கேசவன் சோதரி
வாயார மனதார நாளும் துதித்தேன்
சரணம்
சேயெந்தன் குறை கேட்கும் தாயுள்ளமல்லவோ
தூயவள் உன்னிடமே என்குறைகளுரைத்தேன்
மாயே மரகதமே நீயேயெந்தன் துணை
நோயும் நோய் தீர்க்கும் மருந்தும் நீயன்றோ
No comments:
Post a Comment