“படித்தேன் ரசித்தேன் பாடல் புனைந்தேன்”
“*வியக்க வைக்கும்”
பல்லவி
வியக்க வைக்கும் கற்பக விநாயகனைத் துதித்தேன்
அயனரனரி போற்றும் ஆதிதேவனை
அனுபல்லவி
புயமைந்துடையவனை ஆனைமுகத்தோனை
கயமுகாசுரனை வதைத்த கரிமுகனை
சரணம்
நயனங்கள் மூன்றுடைய பரமசிவன் மகனை
அயனைப் படைத்த கேசவன் மருகனை
இயலிசை நாடகக்கலாரசிகனை
துயரிடர் பவ பயம் போக்கிடும் கணேச்வரனை
“*வியக்க வைக்கும் விநாயகர்” ( முகநூல் பதிவில் படித்த விநாயரைப் போற்றி எழுதிய பாடல்)
No comments:
Post a Comment